Editorial / 2018 ஏப்ரல் 17 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது அமர்வு நேற்றைய தினம் (16) ஆரம்பமானபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் வி.தவராஜாவின் முன்வைப்பினையடுத்து அன்னை பூபதிக்கு 3 நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழர் தேசத்தின் விடுதலைக்காக உண்ணா விரதமிருந்து தன் உயிரை துறந்த அன்னை பூபதியின் 30வது ஆண்டு நினைவு தினம் எஎதிர்வரும் 19 ஆம் திகதி வியாழக்கிழமையன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
அன்னை பூபதியின் நினைவாக அடையாள உண்ணாவிரதமொன்றை மட்டக்களப்பில் அனுஷ்டிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பிலுள்ள அன்னை பூபதியின் நினைவுத்தூபியில், எதிர்வரும் 19ஆம் திகதி வியாழக்கிழமையன்று காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை இந்த அடையாள உண்ணாவிரதம் இடம்பெறவுள்ளதாக, முன்னாள் போராளிகள் அமைப்பான தேசத்தின் வேர்கள் எனும், சமூக நலன் சார்ந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கட்சி அரசியல் சாராது அன்னை பூபதியின் நினைவு தினத்தை சிறப்பாக அனுஷ்டிக்க சமூகநலன் கருதி, அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் அன்னை பூபதியின் நினைவுத்தூபியில் சுடரேற்றி நினைவஞ்சலியும் செலுத்தப்படவுள்ளன.
அதே போல அன்னை பூபதியின் நினைவாக மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்று வரும் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை அன்று மாலை நடைபெறவுள்ளது.


21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025