Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2016 ஜனவரி 25 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கும் சமூக உறவை கட்டிவளர்ப்பதற்கும் இளைஞர்கள் முன்வர வேண்டுமென அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ.எம். அமீர் தெரிவித்தார்.
மதக்குழுக்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தி சமூக உறவை வலுப்படுத்தல் எனும் தொனிப் பொருளில் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் கழகத் தலைவர்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு இனத்துவ கற்ககைகளுக்கான சர்வதேச நிலையத்தின் அனுசரனையுடன், திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்கட்பட்ட தம்பட்டைக் கிராமத்தில், ஞாயிற்றுக்கிழமை (24) மாலை அட்டாளைச்சேனை மத்தியஸ்த சபையின் தவிசாளர் ஐ.எல். ஹாஸிம் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
'ஒரு மதத்தினுடைய கலாசாரத்தை ஏனைய மதம் புரிந்து செயற்படுமாயின், கடந்த காலங்களில் ஏற்பட்ட இனப் பிரச்சினை ஏற்பட்டிருக்காது. எதிர்காலத்தில் பிரச்சினைகளை பேசித் தீர்க்க கூடிய பாதுகாப்பான சூழல் எம்மத்தியில் உருவாக்கப்பட வேண்டும்.
இன முரண்பாடு இன்று இலங்கையில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியில் காணப்படுகின்றது. இதனை பேச்சுவார்த்தை மூலமும் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்குடனும் செயற்பட்டு சமூக கலாசாரத்தை வலுப்படுத்துவதன் ஊடாக இல்லாமல் செய்ய முடியும்' என்று அவர் கூறினார்.
மேலும், 'சகல சமூகங்களும் சமாதானத்தையும், சகோதரத்துவத்தையுமே விரும்புகின்றது. ஒவ்வொரு சமூகத்தவர்களும் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். அப்போதுதான் நாம் எதிர்பார்த்திருக்கின்ற நிலையான சமாதானத்தை அடைய முடியும்.
இதனால் தேசம் முழுதும் சமூகங்களின் மத உரிமையையும், நல்வாழ்வையும் பாதுகாப்பதற்கான உள்ளூர் பொறிமுறைப்பற்றிய உள்ளூர் வளங்கள் கொண்டு புதிய அறிவு உற்பத்தி செய்யப்படும்.
இளைஞர்கள் நாட்டின் அபிவிருத்திக்கும் இன உறவை வளர்ப்பதற்காகவும் அரசாங்கத்தினால் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு இதற்கென அமைச்சும் ஏற்படுத்தப்பட்டு கூடுதலான நிதியினையும் ஒதுக்கீடு செய்துள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago