Niroshini / 2016 ஏப்ரல் 30 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்
தலைவர் சம்பந்தன் ஐயா உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை முன்னெடுத்து வருகின்றார். இந்த முன்னெடுப்பு தமிழ் மக்களுக்கான விடியலை நிச்சயமாக பெற்றுத்தரும் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கண்ணகிகிராமம் கனகர் விளையாட்டு மைதானத்தில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தiலைமையில் நேற்று(29) நடைபெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
தமிழ் பேசும் மக்கள் பெற்றுக்கொள்ளபோகின்ற விடியலானது கடந்த 30வருட காலத்தில் இழந்த இழப்புக்களுக்கு பிராயச்சித்தமாக அமையும்.
தமிழர்கள் இழந்த இழப்புக்களுக்கு தீர்வு காணப்படவேண்டுமானால் வட,கிழக்கு இணைந்த சமஷ்டி முறையிலான தீர்வு எட்டப்பட வேண்டும். அத்தீர்வின் போது விசேடமாக அம்பாரை மாவட்ட தமிழ் மக்களும் அதற்குள் உள்வாங்கப்படவேண்டும். அம்பாறை மாவட்ட தமிழர்கள் எப்போதும் தமிழர்களுடனேயே இணைந்து வாழ விரும்புகின்றனர். தமிழ் மக்களின் இருப்புக்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்றார்.
பலதரப்பட்ட சம்பவங்களினால் கடந்த காலத்தில் தமிழ் மக்களின் இருப்பிடங்கள் பல இல்லாதொழிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் வாழ்ந்த பிரதேசங்கள் சூறையாடப்பட்டுள்ளன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் வாழ்ந்த 11கிராமங்களில் 7கிராமங்கள் எமது கையை விட்டு போயுள்ளன. ஆயினும் இருக்கின்ற கிராமங்களை பாதுகாக்க வேண்டிய கடமைப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம் என்றார்.
“நமது மக்கள் பலதரப்பட்ட ஒடுக்கு முறைகளில் வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறான ஒடுக்குமுறைகளில் இருந்து நாம் மீட்சி பெறவேண்டுமானால் சிறந்த ஆட்சி முறை நாட்டில் இருக்கவேண்டும். அந்த ஆட்சி முறை மூலம் தான் எமக்கான தீர்வு எட்டப்படும் என்பதை மக்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
மேலும், நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளை பாராட்டிய அவர் தமிழர்கள் பாரம்பரியங்கள் மற்றும் விளையாட்டுக்கள் பாதுகாக்கப்படவேண்டும். அப்போதுதான் எங்களுக்குள் உள்ள உணர்வுகள் வளர்ச்சியடையும் எனவும் கூறினார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago