Suganthini Ratnam / 2017 ஜனவரி 12 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு, சந்திவெளிப் பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் புதன்கிழமை (11) மாலை தீ பரவியதன் காரணமாக அவ்வீட்டின்; சமையல் அறை முற்றாகத் தீக்கிரையானதுடன், உபகரணங்களும் தீக்கிரையாகியுள்ளன.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் கூறினர். மின் ஒழுக்கினால் தீ ஏற்பட்டுள்ளதா? என அறிவதற்கு மின்சாரசபை பொறியியலாளர் அழைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினார்.
சந்திவெளி கண்ணகி அம்மன் வீதியிலுள்ள வீட்டின் உரிமையாளர் வர்த்தக நிலையத்திற்குச் சென்றிருந்த வேளை வீட்டின் சமையலறைக் கூரையிலிருந்து புகை வருவதை அவதானித்த அயல் வீட்டார் சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளருக்கு அறிவித்ததையடுத்து இராணுவத்தினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
8 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago