2025 ஜூலை 30, புதன்கிழமை

’சமமான வளப்பங்கீடு வழங்கப்படுகின்றது’

Suganthini Ratnam   / 2017 ஜூலை 13 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண சபையால் சகல இன மக்களுக்கும் சமமான வளப்பங்கீடு வழங்கப்படுகின்றது என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் தெரிவித்தார்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை வியாழக்கிழமை   திறந்து வைத்து  உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்துரையாற்றிய அவர், 'கிழக்கு மாகாண சபையை முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீ அகமட் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும்  முஸ்லிம் காங்கிரசும் பொறுப்பேற்றதையடுத்து கிழக்கு மாகாண சபையினால் சகல இன மக்களுக்கும் சமமான வளப்பங்கீடு வழங்கப்படுகின்றது

இந்த மாகாணத்தில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என மூன்று இனத்தவர்களும் வாழ்கின்றனர்.  இந்த நிலையில் ஒரு இனத்துக்கு மாத்திரம் வளப்பங்கீடு அதிகரிக்குமானால் ஏனைய சமூகங்கள் தட்டிக் கேட்கும்.

இந்த மாகாண சபையை பொறுத்தவரைக்கும் கிழக்கு மாகாண சபைக்குரிய நிதியை முதலமைச்சர்,  மத்திய அரசாங்கத்திடம் குறிப்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடத்தில் நேரடியாக சென்று கேட்டு பெற்று வருகின்றார்.

முதலமைச்சரின் கடுமையான பிரயத்தனத்தினால் கூடுதலான நிதி இன்று கிழக்கு மாகாண சபைக்கு வருகின்றது. அந்த நிதியானது கிழக்கு மாகாணத்திலுள்ள சகல இனங்களையும் மையப்படுத்தி பிரித்து வழங்கப்படுகின்றது.

அதிலொன்றுதான் சுகாதார துறையுமாகும். இந்த சுகாதார துறையை முன்னேற்றுவதற்காக நாம் கூடுதலான நிதியினை வழங்கி வருகின்றோம்.

எம்மால் முடிந்த வரையில் கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரைக்கும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அந்தப்பிரச்சினைளுக்கு எல்லாம் முகம் கொடுத்து நாம் அவற்றினை தீர்த்து வைத்து வருகின்றோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .