Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எஸ்.பாக்கியநாதன்
சர்வதேச பாரிசவாத தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய மாபெரும் விழிப்புணர்வு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை காலை காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய நிபுணர் டாக்டர் திவாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை பாரிசவாத சங்கத்தின் தலைவரும் நரம்பியல் நோய் வைத்திய நிபுணருமான டாக்டர் எம்.ஐ.றிஸ்வி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வின்போது விரைவாக செயற்படுவோம் என்னும் தலைப்பிலான பாரிசவாத நோய் தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகம் ஒன்றை கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ மற்றும் தாதியர் சௌக்கிய பராமரிப்பு பீட மாணவர்களினால் அரங்கேற்றப்பட்டது. அத்துடன் வைத்திய நிபுணர்களினால் உருவாக்கப்பட்ட கீறல் என்னும் குறுந்திரைப்படமும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.
இலங்கை பாரிசவாத சங்கத்தின் தலைவரும் நரம்பியல் நோய் வைத்திய நிபுணருமான டாக்டர் எம்.ஐ.றிஸ்வி தெரிவிக்கையில், 'பாரிசவாத நோயினால் பாதிக்கப்படும் ஒருவருக்கு நான்கரை மணி நேரத்திற்குள் சிகிச்சை வழங்கும்போது அந்த நோயில் இருந்து அவரை காப்பாற்றமுடியும். பாரிசவாத நோயினை குணப்படுத்தமுடியாது என்ற கருத்த இன்று பலரிடம் உள்ளது.முன்னைய காலத்தில் அந்த நிலைமை காணப்பட்டாலும் இன்று அந்த நிலைமை மாற்றப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ வசதிகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் வழங்கப்படுகின்றன. பாரிசவாத நோயினால் பாதிக்கப்படும் ஒருவரை நான்கரை மணித்தியாலத்திற்குள் வைத்தியசாலைக்கு கொண்டுவரும்போது அந்த நோயினை குணப்படுத்தமுடியும். அதன் பிறகு கொண்டுவந்தாலும் சிகிச்சை வழங்கமுடியும் ஆனால் குணப்படுத்து என்பதை உறுதியாக கூறமுடியாது' என்றார்.


5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago