2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சர்வதேச மகளிர் தின நிகழ்வு

Niroshini   / 2017 மார்ச் 29 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு (வை.எம்.சீ.ஏ) கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு லயன்ஸ் கழகம், சீ.பி.எம். சர்வதேச நிறுவனம் என்பன இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தின நிகழ்வு, மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ பிரதான மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

மட்டு-கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜீ.ஜெகன் ஜீவராஜின் ஒருங்கிணைப்பில் அதன் உப தலைவர் எஸ்.எஸ்.பாக்கியராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மட்டு-லயன்ஸ் கழகத்தின் நிருவாக உறுப்பினர் திருமதி.டொக்டர் ரோஜினி, மட்டு –தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறுவர், மகளிர் பிரிவு மாவட்ட பொறுப்பதிகாரி திருமதி.என்.சுசிலா, மட்டு-கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் தலைவர் ஈ.வி.தர்ஷன், இயக்குநர் சபை உறுப்பினர்களான திருமதி.மதிதரன், திருமதி.கருணாகரன், ஏறாவூர் பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சு.பிரதீபன், மட்டக்களப்பு வை.டப்ளியூ.சீ.ஏயின் தலைவி திருமதி.விஜிதா நோபட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது அதிதிகளினால் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப பெண்கள் 29 பேர்,  விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .