Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்
சர்வதேச விசாரணையொன்று இலங்கைக்கு தேவையில்லையென்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
விடுதலைப் புலிகளும் மிகப்பெரும் குற்றங்களை செய்துள்ளனர்.மட்டக்களப்பு மாவட்டத்தையே அழித்துள்ளனர்.பெருமளவானோரை படுகொலை செய்துள்ளார்கள். எங்களுக்கு சாதகமானோரை கொன்றொழித்துள்ளார்கள்.
யுத்த காலப்பகுதியில் கொத்துக்கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது நாங்கள் சரத்பொன்சேகா, பசில் ராஜபக்ஷ மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோரிடம் எல்லாம் இதனை நிறுத்த நடவடிக்கையெடுக்குமாறு கூறியிருந்தோம்.
நாங்கள் தான் திருகோணமலையில் கப்பல் மூலம் காயப்பட்டு வந்தவர்களை காப்பாற்றி மருத்துவ உதவிகள் வழங்கினோம்.
இதனை சிங்கள இராணுவம் செய்தது என்பதற்கு அப்பால் அதற்கான சந்தர்ப்பத்தை தமிழர்கள் தான் வழங்கினார்கள்.இந்த அழிவுகள் எதிர்காலத்தில் வராமல் தடுக்க வேண்டுமேயொழிய இது தொடர்பில் ஒருசாராரை மட்டும் தூக்கிலிட வேண்டும் என்பதில் நான் மாற்றுக் கருத்து கொண்டவன்.
தற்போதுள்ள சூழலில் விசாரணையொன்று நடைபெற்று அறிக்கை வந்துள்ளது.உள்நாட்டு பொறிமுறையூடாக சிங்கள மக்கள் மத்தியில் குரோதம் வளராத வண்ணம் தமிழர்களுக்கு தீர்வு வழங்கவேண்டும் என அனைவரும் கருதுகின்றனர்.இந்த எண்ணத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு தற்போதைய எதிர்க் கட்சி தலைவருக்கு வந்துள்ளது.
தற்போது உள்ள ஆட்சியாளர்கள் உள்ளக விசாரணைமூலம் தீர்வினைப் பெற்றுக்கொடுப்போம் என்று உறுதியளித்துள்ளனர்.இதுதான் எதிர்காலத்தில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பாகும்.
இன்று ஒரு நல்ல சூழல் கனிந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்குமானால் நாங்கள் இந்த அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கு தயாராகவுள்ளோம் என்றார்.
மேலும்,ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எங்களை புறக்கணித்து வருவதனால் தொடர்ந்து அவர்களுடன் இயங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.இது தொடர்பில் நாங்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளோம்.அதற்கு பதில் கிடைக்காத சந்தர்ப்பத்தில் அவர்களுடன் இயங்கமுடியாத நிலையே ஏற்படும்.
மேலும்,எதிர்வரும் பிரதேச சபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து தமது படகுச்சின்னத்திலேயே போட்டியிடும் எனவும் அவர் தெரிவித்தார் எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago