2025 நவம்பர் 01, சனிக்கிழமை

சவுக்கடி இரட்டைக்கொலை; மூவர் விடுதலை

Editorial   / 2017 நவம்பர் 15 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, சவுக்கடி பிரதேசத்தில் தாய், மகன் இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 1ஆம், 2ஆம், 3ஆம் சந்தேகநபர்கள், ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தால், இன்று (15) விடுதலை செய்யப்பட்டனர்.

இதேவேளை, 4ஆம், 5ஆம் சந்தேகநபர்கள், எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் ஆஜர்செய்யபட்டபோதே, மேற்கண்டவாறு தீர்ப்பளித்துள்ளார்.

சவுக்கடி, முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த திருமதி மதுவந்தி பீதாம்பரம் (வயது 26) மற்றும் அவரது மகனான பீதாம்பரம் மதுஷ‪ன் (வயது 11) ஆகியோர், கடந்த மாதம் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில்  கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவந்த பொலிஸார், சம்பவ தினத்தன்று, மயிலம்பாவெளி கிராமத்தைச் சேர்ந்த நடராஜா வசந்தன், தம்பித்துரை சுகுமார், சவுக்கடி கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை முருகையா ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதையடுத்து மலதிக விசாரணi மேற்கொண்டு வந்த பொலிஸார் இம்மாதம் 1ஆம் திகதி கொலையின் பிரதான சூத்திரதாரிகள் என சந்தேகிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கந்தசாமி புஸ்பராசா மற்றும் சவுக்கடிப் கிராமத்தைச் சேர்ந்த சகாயராசா சில்வஸ்டர் ஆகியோரைக் கைது செய்ததுடன் திருடப்பட்டதாக கூறப்படும் 16 பவுண் தங்க நகைகளை அவர்களிடமிருந்து மீட்டுள்ளனர்.

குறித்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, 1ஆம், 2ஆம், 3ஆம் சந்தேகநபர்கள் குற்றமற்றவர்கள் என நீதிமன்று விடுதலை செய்ததுடன், 4ஆம், 5ஆம் சந்தேகநபர்கள், எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நடத்தி கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் மற்றும் திட்டம்தீட்டியவர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு, நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X