Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 மே 26 , பி.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
கடந்தாண்டு கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரிட்சையில் தோற்றி, 9ஏ பெற்ற மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக் குட்பட்ட கன்னன்குடா மகா வித்தியாலய மாணவனுக்கு, சந்திரசேகரம் சமூக நல அமைப்பால் மடிக் கணினி வழங்கிவைக்கப்பட்டது.
வறுமையிலும் சாதித்துக் காட்டிய கன்னன்குடா பருத்திச் சேனையைச் சேர்ந்த சத்தியானந்தன் மிலக்சனுக்கே இவ்வாறு மடிக் கணினி வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த மாணவன், உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கல்வி கற்க உள்ள நிலையில், அவரது கற்றலுக்கு உதவும் விதத்தில், மடிக் கணினியொன்றை வழங்குமாறு சமூக சேவையாளரும் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியுமாகிய மாணிக்கப்போடி சசிகுமார், மட்டக்களப்பு அமிர்தகழி சந்திரசேகரம் சமூக நல அமைப்பிடம் விடுத்த வேண்டுளை அடுத்தே, பிரான்ஸில் வசிக்கும் நிதர்சினி குடும்பத்தினர் ஊடாகவே, இவ் மடிக் கணினி மாணவனின் வீட்டுக்குச் சென்று வழங்கிவைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .