2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

சிகிச்சை பெற்றுவந்தவர் மரணம்: அடையாளம் காணுமாறு உறவினர்களுக்கு அழைப்பு

Editorial   / 2019 ஜூலை 17 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள  ஆறுமுகத்தான்குடியிருப்பு  பிரதேசத்தில் வீதி விபத்தின்போது  படுகாயமடைந்தவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

 கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை  ஆ றுமுகத்தான்குடியிருப்பில் வீதியைக் கடந்து சென்ற இந்நபர் மீது, மோட்டார் சைக்கிள் மோதியதில்  படுகாயமடைந்து அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டதிலிருந்து  இதுவரை அடையாளம் காணப்படவில்லையென   வைத்தியசாலை அலுவலர்கள் உத்தியோகத்தர் தெரிவித்தார்.

தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இவர் அடையாளம் காணப்படவில்லையாயின் உடற்கூறாய்வின் பின்னர் சடலம் அரச செலவில் அடக்கம் செய்யப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

மரணமானவரின் உற்றார் ,உறவினர்கள் எவராவது இருப்பார்களாயின் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் தொடர்பு கொண்டு அடையாளம் காட்டுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X