Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Editorial / 2022 ஜூன் 22 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
தண்டவாளத்தின நடுவே செய்வதறியாது நின்றுக்கொண்டிருந்த சினை மாடொன்றை, ரயில் சாரதி மிகவும் சாதூரியமாக காப்பாற்றிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு- பொலன்னறுவை ரயில் தண்டவாளத்தில், வெலிகந்தைக்கும் அசலபுரைக்கும் இடையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
6479 இலக்கம் கொண்ட ரயில், மாகோவிலிருந்து மட்டக்களப்பு நோக்கி இன்று (22) காலை பயணித்துக்கொண்டிருந்தது. அசெலபுர-வெலிகந்த பகுதியில், சினை மாடொன்று நின்றுக்கொண்டிருந்துள்ளது.
எவ்வளவு ஒலி (ஹோன்) எழுப்பியும் அந்த சினைமாடு அசைவதாய் இல்லை. ரயில் சாரதியான ஏ.எச.எம்.சீ.பீ.தீகல, மிகவும் சாதூரியமான முறையில் ரயிலை நிறுத்தினார்.
அதன் பின்னர் ரயில் தலைமை காவலர் ஏ.ஜீஎம்.சமீர தலைமையிலான காவலர்கள், ரயிலில் இருந்து இறங்கி குறித்த மாட்டைத் தண்டவாளத்திருந்து அப்புறப்படுத்திவிட்டனர்.
சாரதி மற்றும் காவலர்களின் செயற்பாட்டால், மாடு மற்றும் குட்டியின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என பாதுகாப்பு அதிகாரி எசார் மீராசாஹிபு தெரிவித்தார்.
குறித்த மனிதாபிமானமிக்க செயலைப் புரிந்த சாரதியை, ரயில் நிலைய அதிபர் தொடக்கம் அப்பிரதேச மக்களும் பாராட்டியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago