Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2021 பெப்ரவரி 10 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மனைவியின் முதல் கணவரது குழந்தைக்கு சூடு வைத்தவரை விளக்கமறியலில் அடைத்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவு, மிச்நகர் கிராமத்தில் தனது மனைவியின் முதல் கணவரது 6 வயதான பெண் குழந்தைக்கு சூடு வைத்த குற்றச்சாட்டில் அப்பெண்ணின் 25 வயதான இரண்டாவது கணவர் கை செய்யப்பட்டார்.
கரண்டியை சூடேற்றி அந்தச் சிறுமிக்கு முகத்தில் சூடு வைத்த அடையாளங்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (09) ஆஜர் செய்தபோது, இம்மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரால் மீட்கப்பட்ட சூடு வைக்கப்பட்டதாகக் கருதப்படும் சிறுமி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
13 Jul 2025
13 Jul 2025
13 Jul 2025