Princiya Dixci / 2022 ஜூலை 25 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நேற்று (24) அதிகாலை இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.
வாழைச்சேனை நெசவு வீதியிலுள்ள வீடு ஒன்றின் சமயலறை ஜன்னல் வழியாக உள் நுழைந்த திருடன், நித்திரையிலிந்த 15 வயதுச் சிறுமியின் தங்கச் சங்கிலியை அறுக்க முற்பட்ட போது, சிறுமி கத்தியதால், திருடன் தப்பியோடியுள்ளார்.
அதிகாலை 3 மணியளவில் வந்துள்ள திருடன், அலுமாரியை உடைத்து அதிலிருந்த 25,000 ரூபாய் பணத்தை எடுத்ததன் பிற்பாடே, அங்கு உறங்கிக் கொண்டிருந்த சிறுமியின் கழுத்தை நசுக்கி தங்கச் சங்கிலியை அறுக்க முற்பட்டுள்ளார்.
சிறுமியின் சத்தம் காரணமாக வீட்டில் இருந்தவர்கள் எழும்பிய நிலையில், மாலையை எடுக்காமல் தப்பிச் சென்றுள்ளார்.
சிறுமி கூறிய அடையாளத்துக்கமைய குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனை, வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், குறித்த இளைஞன் திருட்டு சம்பத்துடன் பல தடவை கைது செய்யப்பட்டவர் என்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
39 minute ago
53 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
53 minute ago
4 hours ago
5 hours ago