Editorial / 2017 டிசெம்பர் 31 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், நடராஜன் ஹரன்
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவு புதுக்குடியிருப்புக் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து, சிறுமியொருத்தியின் சடலம், நேற்று (30) மாலை மீட்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
புதுக்குடியிருப்பு, கடற்கரை வீதியை அண்டி வாழும் சக்திவேல் ருட்ஷகா (வயது 12) என்ற புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில் தரம் 7இல் கல்வி கற்கும் மாணவியின் சடலமே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
மாலை 5.45 மணியளவில் வேலை முடிந்து வீடு வந்து வீட்டு அறையினுள் பார்த்தபோது, சிறுமி சடலமாகக் காணப்பட்டதாக சிறுமியின் தாய் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளில் காத்தான்குடி பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago