Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 12 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. விஜயரெத்தினம்
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில், கொழும்பு மகரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யுவதியொருவர், சிகிச்சை பலனின்றி, நேற்று (11) உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு - கூழாவடி 8ஆம் குறுக்கைச் சேர்ந்தவரும் கிழக்கு மாகாணப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீடத்தைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவியான கருணாகரன் உமாசங்கரியே (வயது 22), இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேற்படி யுவதி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிகச் சிகிச்சைக்காக கொழும்பு மகரகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 31ஆக அதிகரித்துள்ளது.
மேற்படி யுவதி தாக்குதல் நடந்து, 82 நாள்களுக்கு பின்னர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago