2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

சீயோன் தேவாலயத்தில் விசேட அஞ்சலி

Editorial   / 2023 ஏப்ரல் 21 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறுத்   தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 4ம் ஆண்டு நினைவேந்தல் இடம்பெற்றது.

சீயோன் தேவாலயத்தில் விசேட ஆராதனையும் கல்லடிபாலத்துக்கு  அருகிலுள்ள நினைவு தூபி மற்றும் காந்திபூங்காலவிலுள்ள நினைவு தூபியிலும்  பலத்த பாதுகாப்புக்கு  மத்தியில் விசேட ஆராதனையும் உயிர் நீத்தவர்களுக்கு மலர்தூவி மெழுகுவர்தி ஏற்றி ஒரு நிமிட அஞ்சலியும் செலுத்தினா.

கடந்த 2019 ம் ஆண்டு ஏப்பிரல் 21 ம் திகதி சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை  குண்டு தாக்குதலில் சிறுவர்கள் 14 பேர் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 30 பேர் படுகாயமடைந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .