2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சு.க வின் மே தின நிகழ்வை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்

Editorial   / 2018 மே 04 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

ஸ்ரீ  லங்கா சுதந்திரகட்சி இம்முறை மட்டக்களப்பில் ஏற்பாடு செய்துள்ள மே தின கொண்டாட்டத்தை  கண்டித்து, அமைதிவழியில் கவனயீர்பு போரட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக, மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்கால் நினைவு தின நிகழ்விலும் கட்சி மத அரசியல் நலன்களுக்கு அப்பால தமிழர் என்ற அடையாளத்துடன் அனைவரும் வருமாறு அச்சங்கம்  அழைப்பு விடுத்துள்ளது. 

மட்டக்களப்பு அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் காரியாலயத்தில், இன்று (04) காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி இதனை தெரிவித்தார் 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X