Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 06 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. விஜயரெத்தினம், ஏ.எச்.ஏ. ஹுஸைன், வடிவேல் சக்திவேல்
4. 50,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்வர்
4. 1,500 பஸ்கள் போக்குவரத்துக்கு ஏற்பாடு
4. கொழும்பில் இருந்து 1,500 பேர் ரயிலில் வருவர்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவென, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, இன்று (06) தெரிவித்தார்.
மேதினக் கூட்டம் தொடர்பாக அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ‘தேசிய ஐக்கியத்துக்கு தொழிலாளர் பலம்’ எனும் தொனிப்பொருளின் மட்டக்களப்பு - செங்கலடி - மாவடிவேம்பில், நாளை (07) பிற்பகல் 2 மணியளவில் மே தினக்கூட்டம் இடம்பெறவுள்ளதெனவும், நாடளாவிய ரீதியல் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், பிரதேச அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் உட்பட 50,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 10,000 பேர் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
மேதினக் கூட்டத்துக்கு நாடளாவிய ரீதியில் இருந்து வருகை தருகின்ற பொதுமக்களுக்கு போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்த அவர், இதற்கென 1,000 இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடவுள்ளன எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன், கொழும்பில் இருந்து 1,500 பேர், ரயில் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து, இராஜாங்க அமைச்சரும் ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கருத்துத் தெரிவிக்கையில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் பங்குபற்றலுடன் இடம்பெறும் இக்கூட்டத்துக்கு நாட்டின் நாலா புறங்களிலும் இருந்தும் வரும் கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்கள், பிரமுகர்கள் ஆகியோரை அழைத்து வருவதற்காக, சுமார் 1,500 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்ததோடு, வௌிமாவட்டங்களில் இருந்து சுமார் 25 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
1 hours ago
25 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
25 Aug 2025