Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூலை 09 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்புப் பிராந்திய சுகாதார சேவைகளின் கீழ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சால் முன்னெடுக்கப்பட்ட 63.08 மில்லியன் ரூபாய் செலவிலான அபிவிருத்தித் திட்டங்களை மக்கள் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வு, எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறும் என, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
வாழைச்சேனை மற்றும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைகள், மீராவோடை பிரதேச வைத்தியசாலை ஆகியவற்றில் கடந்த வருட இறுதியில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களே கையளிக்கப்படவுள்ளன.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 7 மில்லியன் ரூபாய் செலவில் வெளிநோயாளர் பிரிவுக் கட்டமும்; 10.4 மில்லியன் ரூபாய் செலவில் வைத்திய நிபுணர் விடுதியும் அமைக்கப்பட்டுள்ளன.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சுமார் 21 மில்லியன் ரூபாய் செலவில் ஒளடதக் களஞ்சியமும் பரிசோதனைக் கூடமும் அமைக்கப்பட்டுள்ளன.
மீராவோடை பிரதேச வைத்தியசாலையில் 5.4 மில்லியன் ரூபாய் செலவில் அவசர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
20 மில்லியன் ரூபாய் செலவில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
24 May 2025
24 May 2025