2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

சுகாதாரத்துக்கு பாரிய அச்சுறுத்தல்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2017 நவம்பர் 23 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆண்டுதோறும் பெய்யும் மழையினால் மட்டக்களப்பு-கல்முனை நெடுஞ்சாலை வீதியில் தேங்கி நிற்கும் மழைநீர் முறையான வடிகால்வசதிகள் இல்லாதால் சுகாதாரத்துக்கு பாரிய அச்சுறுத்தல்,மதகுகள் மண்திட்டிகள் மூடப்பட்டு காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பு -கல்முனை நெடுஞ்சாலை வீதிகளில் ஆண்டுதோறும் பெய்யும் மழைநீரானது தேங்கி காணப்படுவதால் போக்குவரத்துக்கும், சுகாதாரத்துக்கும் பொதுமக்கள் பாரியதொரு அசௌரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக, பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் குறித்த நெடுஞ்சாலை வீதிகளில் பெய்கின்ற மழைநீரானது தேங்கி நிற்காமல், வழிந்தோடக்கூடிய வகையில் வடிகால் வசதிகளுடன் கூடிய வடிகாண்கள் இல்லாததால் வீதிகளில் காணப்படும் படுகுழிகளில் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.

இவ்வாறு தேங்கி நிற்கும் நீரானது எந்தப்பக்கமும் வடிந்து போகமுடியாமல் காணப்படுகின்றது.இதனால் தொடர்ச்சியாக நுளம்புகள் முட்டையிட்டு டெங்கு குடம்பிகள் உருவாகும் வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளது.இது சுகாதார துறைக்கு பாரியதொரு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக  பொதுசுகாதார பரிசோதகர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

குறிப்பாக இந்நெடுஞ்சாலை வீதிகளில் களுதாவளை மகாவித்தியாலயத்திலிருந்து -களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபம் வரையிலான நெடுஞ்சாலை வீதி,பெரியகல்லாறு பிரதான வீதியின் இருமரங்கிலும் முறையான வடிகால் வசதிகள் இல்லாததால் மழைநீர் தேங்கி காணப்படுகின்றது.மழைநீர் தேங்கி இருப்பதால் மழைநீர் செல்லக்கூடிய வீதிக்கு குறுக்காக காணப்படும் மதகுகளில் மண்திட்டிகள் நிரப்பப்பட்டு மதகுகள் மண்மூடிக்காணப்படுகின்றது.

வெள்ளநீர் வீதிகளில் தேங்கியிருப்பதால் வாகனங்கள் வேகமாக செல்லும் போது நீரை பீறுட்டு கிளித்துக்கொண்டு செல்கின்றது.இதனால் பாதசாரிகள்,பொதுமக்கள்,மாணவர்கள் கழிவுநீரால் குளிர்த்துக்கொண்டு போவதாகவும்,இதனால் சுகதேகியாக காணப்படும் பொதுமக்கள் நோய்க்காவிகளால் பீடிக்கப்பட்டு நோயாளியாக மாறக்கூடிய வாய்ப்பேற்படும்.

எனவே மழைநீரானது நெடுஞ்சாலை வீதியில் தேங்கி நிற்காதவகையில் வடிகால் வசதிகளையும்,வெள்ளநீர் வடிந்தோடக்கூடிய வகையில் முன்னேற்ற ஆயத்த வேலைகளையும் களுதாவளை பிரதேச சபைச்செயலாளர்,களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின்  செயலாளர்,மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை நிறைவேற்றுப் பொறியியலாளர் போன்றோர்கள் பொதுமக்கள் பயன்படும் வகையில் காத்திரமான திட்டங்களை செய்துதர வேண்டுமென கோரிக்கை முன்வைக்கின்றார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .