2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

சுதாகரனை விடுதலை செய்யக்கோரி ஜனாதிபதியிடம் எம்.பி உருக்கம்

ஆர்.ஜெயஸ்ரீராம்   / 2018 மார்ச் 26 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி, அவரை விடுதலை செய்யவேண்டுமென, மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உருக்கமான கோரிக்கையை முன்வைத்தார்.

“இந்த நாட்டில், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி ) பல குழப்ப நிலைகளை முன்னர் ஏற்படுத்தியிருந்தது. எனினும், அதற்கு அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கி, அரசியலிலும் ஈடுபடுத்தியுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

கிரான் பிரதேசத்தில், பிரதேச இளைஞர்களால் இன்று (26) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆனந்த சுதாகரனின் விடுதலை செய்யக் கோரிய கையெழுத்து வேட்டையில் கலந்துகொண்டு, கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

“கிளிநொச்சியைச் சேர்ந்த அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனுக்கு பொது மன்னிப்பு வழங்கி, அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

“இந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைப்பதற்காக, தமிழ் மக்கள் வாக்களித்து, தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தனர். தாங்கள் கருணையாக நின்று, அவரை விடுதலை செய்ய முன்வரவேண்டும்.

“அரசியல் கைதி ஆனந்தசுதாகரன், தமது மனைவியின் மரணச்சடங்கில் கலந்துகொள்ள வந்தபோது, அவரது பிள்ளை, தந்தையுடன் பொலிஸ் வாகனத்தை நாடிச் சென்றமை, மக்களின் மனதில் அனுதாப உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

“எனவே, அப்பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி, தாங்கள் கருணையாக நின்று, தந்தை சுதாகரனை விடுதலை விடுதலை செய்ய முன்வரவேண்டும்” என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .