Editorial / 2018 மார்ச் 27 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம.எம்.அஹமட் அனாம், எம்.எஸ்.எம்.நூர்தீன்
தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரின் விடுதலையை வலியுறுத்தி, மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், இன்றும் (26) போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அரசடித்தீவு உதவும் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில், படுவான்கரை பிரதேசத்திலும்; ஆரையம்பதி இளைஞர்களின் ஏற்பாட்டில், மண்முனைப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளிலும்; ஆரையம்பதி பொதுச்சந்தை உள்ளிட்ட பகுதிகளிலும், இந்தக் கையெழுத்துப் பெறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இக்கையெழுத்துப் போராட்டத்தில் இன, மத வேறுபாடுகளின்றி, அனைவரும் தமது கையெழுத்துகளைப் பதிவுசெய்துள்ளனர்.
அத்துடன், இந்தப் போராட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உட்படப் பலர் கலந்துகொண்டு, கையெழுத்துப் போராட்டத்தை நடத்தினர்.
இதேவேளை, கோறளைப்பற்று பிரதேச இளைஞர்கள் ஒன்றிணைந்து, பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறும் நடவடிக்கையை, வாழைச்சேனை பொதுச் சந்தைப் பகுதி, சந்திவெளி பொதுச் சந்தைப் பகுதிகளிலும் மேற்கொண்டு வருகின்றனர்.
அநாதரவாகவுள்ள இரண்டு பிள்ளைகளுக்காக, ஆனந்த சுதாகரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பொதுமக்களின் கையெழுத்துடனான மனுவொன்று, ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 minute ago
23 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
23 minute ago
41 minute ago
1 hours ago