2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சுனாமி அனர்த்த நினைவு நாளை தொடர்ந்தும் அனுஷ்டிக்க வேண்டும்

Editorial   / 2017 டிசெம்பர் 26 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

“சுனாமி அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களின் நினைவு நாளை, நாம் தொடர்ந்து அனுஷ்டிக்க வேண்டும்” என, மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜோசப் பொன்னையா தெரிவித்தார்.

சுனாமி அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களின் 13ஆவது ஆண்டு நினைவு தினம், மட்டக்களப்பு திருச்செந்தூர் பிரதேசத்தில் இன்று (26) காலை அனுஷ்டிக்கப்பட்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“ஆழிப்ரேலையால் ஆயிரக்கணக்கான மக்கள் தமது உயிர்களை இழந்தார்கள். அவர்களின் நினைவு தினத்தை நாம் ஆண்டு தோறும் அனுஷ்டித்து வருகின்றோம்.

“இவர்களின் நினைவு தினம், ஆண்டு தோறும் தொடர்ந்தும் அனுஷ்டிக்கப்படல் வேண்டும்.

“இந்த அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களை ஞாபகப்படுத்தி அவர்களுக்காக நாம் பிராத்திக்க வேண்டும். அவர்களின் பாவங்களை இறைவன் மன்னித்து அவர்களுக்கு ஈடேற்றம் வழங்க வேண்டும்.

“மீண்டும் ஒருமுறை இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படாமல் இறைவன் நம்மை பாதுகாக்க வேண்டும். இந்தத் துயரம் எங்கள் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத ஒன்றாகும். இந்த நாளை நாம் எப்போதுமே மறக்க முடியாது. நாம் இறந்தவர்களுக்காக பிராத்திப்போம்” என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X