Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 05 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கார்த்திகேசு, எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பாகான், ஆர்.ஜெயஸ்ரீராம்
சர்வதேச ரீதியில் சுனாமி ஒத்திகைப் பயிற்சியொன்றுக்கு அமைவாக, 28 நாடுகள் கலந்துகொள்கின்ற ஒத்திகைப் பயிற்சி, இலங்கையில், இன்று (05) இடம்பெற்றது. இதற்கமைவாக, கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களிலும், இந்த ஒத்திகை இடம்பெற்றது.
அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் இன்று காலை 09.02க்கு, எச்சரிக்கைக் கோபுரத்தின் ஊடாக முதலாவது அபாய ஒலி எழுப்பப்பட்டு, ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வொத்திகை நடவடிக்கை, திருக்கோவில் பிரதேச செயலகத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள எச்சரிக்கைக் கோபுரத்தில் மூன்று முறை அபாய ஒலி எழுப்பப்பட்டு, பரீட்சார்த்த ஒத்திகையாக மேற்கொள்ளப்பட்டது.
திருக்கோவில் பிரதேசத்துக்கான இவ்வொத்திகை நடவடிக்கைக்கு, திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.தயானந்தம் ஆகியோர், கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 7 சுனாமி முன்னெச்சரிக்கைக் கோபுரங்களும், சுனாமி ஒத்திகை நடவடிக்கைகளுக்காக ஒலி எழுப்பப்பட்டு, இயங்கச் செய்யப்பட்டனவென, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள களுவாஞ்சிகுடி, காத்தான்குடி, ஆரையம்பதி, மண்முனை வடக்கு, ஏறாவூர்பற்று, வாழைச்சேனை, வாகரை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள கரையோரப் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சுனாமி முன்னெச்சரிக்கைக் கோபுரங்கள், இன்று காலை 9 மணிக்கும் பின்னர் 9.35 மணிக்கும் ஒலி எழுப்பப்பட்டு, ஒத்திகை நடவடிக்கைகளுக்காக பரீட்சிக்கப்பட்டனவென அவர் கூறினார்.
இந்தக் கோபுரங்களில் இருந்து ஒலி எழுப்பிய போது, அங்கு சென்ற அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலக அதிகாரிகள், அதனை கணிப்பீடு செய்தனர்.
29 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago
2 hours ago