2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

“சுப்பிரமணியம் செட்டியார்” விருது பெற்றார் ஊடகவியலாளர் சக்திவேல்

Editorial   / 2022 டிசெம்பர் 14 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


  - ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம், இலங்கை பத்திரிகை பேரவையுடன் இணைந்து நடத்திய 2021 ஆம் ஆண்டுக்கான அதி சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் வைபவம் கொழும்பு கல்கிஸ்ஸ மௌண்ட் லவின்யா ஹோட்டலில் செவ்வாய்கிழமை(13.12.2022) மாலை  நடைபெற்றது.


இதில் சிறந்த ஊடகவியலாளருக்கான மக்களின் பிரச்சினைகளை கட்டுரைகள் வடிவில் தமிழ் மிரர் பத்திரிகையில் வெளிக்கொணர்ந்தமைக்காக “சுப்பிரமணியம் செட்டியார்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அவரது ஊடக வளர்ச்சிக்கும், எழுத்தாற்றலுக்கும் தொடர்ந்தும், ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும், மேற்கொண்டு வரும், பத்திரிகை ஆசிரியர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், குடும்பத்தினர், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், சக ஊடக நண்பர்கள் உள்ளிட்ட பலரும், வழங்கிய ஒத்துழைப்பே அவரது வளர்ச்சிக்கும், இவ்விருது பெறுவதற்கும் காணரமாக அமைந்ததாகவும், அனைவருக்கும் மிகக் கௌரவமான நன்றிகளையும், தெரிவித்துக் கொள்வதாக இதன்போது விருது பெற்ற மட்டக்களப்பைச் சேர்ந்த ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் தெரிவித்தார்.

சமூக சேவை செயற்பாட்டாளரான ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் அவர்கள் இதற்கு முன்னரும், பிரதேச மட்டம் முதல் தேசிய மட்டம் வரையில் பல விருதுகளைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

  இலங்கையில் ஊடகவியல் துறையை மேம்படுத்தும் நோக்கில் சிறந்த ஊடகவியலாளர்களைத் தெரிவு செய்து கௌரவிக்கும் நிகழ்வு இம்முறை 23 வது தடவையாகவும் நடத்தப்பட்டது  .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X