2025 மே 06, செவ்வாய்க்கிழமை

‘சுய தேவை முடிந்தபின்னர் அரிசி விநியோம்’

Editorial   / 2020 ஏப்ரல் 14 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் அரிசி தேவையைப் பூர்த்தி செய்த பின்னர், மற்றைய மாவட்டங்களுக்கு அரிசி விநியோகிக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா, மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு நெல் கொண்டுசெல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தத் தடை நேற்று (13) முதல், அமலாகியுள்ள நிலையில், மட்டக்களப்பில் அரிசி ஆலைகள் திறக்கப்பட வேண்டும் என மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் அனைத்து அரிசி ஆலைகளும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களையும் சந்திக்கும் விசேட கூட்டம் நேற்று மாவட்டச் செயலகத்தில் அரசாங்க கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்றது.

அரிசித் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பட்டினியால் பாதிக்கப்படாமலிருக்க, அனைத்து அரிசி ஆலைகளும் திறக்கப்பட்டு இயங்க வேண்டும் என்றும் மாவட்டத்தினுடைய அரிசித் தேவையைப் பூர்த்தி செய்த பின்னரே பிற மாவட்டங்களுக்கு அரிசி விநியோகிக்க வேண்டும் என்றும், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கே அரிசி விற்பனை செய்ய வேண்டும் என்றும் அரசாங்க அதிபர் அரிசி ஆலை உரிமையாளர்களைக் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் மாவட்டத்தின் எந்த இடத்திலிருந்தும் வியாபாரிகள் அரிசியைக் கொள்வனவு செய்யமுடியும் எனவும் அதற்கான வசதிகள் செய்துதரப்படும் என்பதுடன் அரிசி ஆலை உரிமையாளர்கள் இலாப நோக்கமற்று மக்களுக்குச் சேவை வழங்க முன்வரவேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X