2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

சுற்றாடல் வாரத்தையொட்டி விழிப்புணர்வுப் பேரணி

Editorial   / 2018 ஜூன் 07 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம, எச்.எம்.எம்.பர்ஸான்

உலக சுற்றாடல் வாரத்தையொட்டி, “பிளாஸ்டிக் மாசுபாட்டை வெல்வோம்” என்னும் தொனிப்பொருளில், விழிப்புணர்வுப் பேரணி, வாழைச்சேனையில் இன்று (07) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையும் வாழைச்சேனை பிரதேச செயலகமும் இணைந்து, "மீள்பாவனைக்கு உதவாதவற்றைத் தவிர்த்துக் கொள்வோம்" என்ற எண்ணக்கருவுக்கிணங்க மேற்கொண்ட இந்த விழிப்புணர்வுப் பேரணி, வாழைச்சேனை பிரதேச சபை முன்பாக ஆரம்பமாகி, வாழைச்சேனை சந்தை வரை சென்றது.

மட்டக்களப்பு மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகாரசபை உத்தியோகத்தர் ஏ.ஜே.எம்.முகீத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அதிகாரசபை உத்தியோகத்தர் எஸ்.தட்சாயினி, வாழைச்சேனை பிரதேச செயலக கரையோர பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.ஏ.பைறூஸ், வாழைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை இந்துக் கல்லூரி சுற்றாடல் முன்னோரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

பேரணியாகச் சென்றவர்கள், வாழைச்சேனை வியாபார நிலையங்களுக்கு சென்று, கடைகளில் பயன்படுத்தப்படும் பொலித்தீன்களால் ஏற்படும் பாதிப்புகள் சம்பந்தமாக, வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு வழங்கினர்.

மேலும், அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட மீள்பாவனைக்கு உதவாத பொலித்தீன் பாவனையை வியாபாரிகள் மேற்கொண்டால், உடனடியாக அவற்றைக் கைவிட்டு, எவ்வாறான பொலித்தீன்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கருத்துரைகளையும் வழங்கினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X