2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

சுற்றுலா படக்குச் சவாரி சேவை

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 ஜூலை 07 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி வாவியில், வாவி சுற்றுலா படக்குச் சவாரி சேவையை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் பிரதம அதிதியாக கலந்துகொண்டு  நேற்று (06)  ஆரம்பித்து வைத்தார்.

காத்தான்குடி அல்-அக்ஸா ஆற்றங்கரை மீனவர் சங்கத்தின் ஏற்பாட்டில் வாவி சுற்றுலா படக்குச் சவாரி சேவை நடாத்தப்படுகிறது.

இச்சுற்றுலாப் படகுச் சேவையினூடாக மண்முனை, முதலைக்குடா, சிரையா தீவு, கரையக்கண் தீவு, பெரியகளம், கல்லடி, முகத்துவாரம் உள்ளிட்ட ஏனைய சிறு படகுச் சவாரிகளையும் பயணிகள் மேற்கொள்ள முடியும்.

காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கும் இயற்கையோடு ஒருமித்த இவ்வாவிச் சுற்றுலா சேவையானது, சிறுவர்கள் மற்றும் படகுச் சவாரி பிரியர்களுக்கு சிறந்ததொரு பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த பொழுதுபோக்குத் திட்டங்களை ஊக்குவிக்கும் முகமாக, இப்படகுச் சவாரி சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள படகின் கூரையை அமைப்பதற்கான முழுமையான செலவை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தனது சொந்த நிதியில் இருந்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X