Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 03 , பி.ப. 02:10 - 1 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 126ஆவது ஜனன தின நிகழ்வுகள், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று (03) நடைபெற்றன.
மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டிலும் விபுலானந்தர் நூற்றாண்டு சபையின் ஒத்துழைப்புடனும் சுவாமி விபுலானந்தரின் ஜனன தினத்துக்கான பிரதான நிகழ்வுகள், மட்டக்களப்பு, திருநீற்றுக்கேணிப் பூங்காவில் நடைபெற்றன.
மாநகர மேயர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில், மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி பிரபு பிரபானந்த ஜி மகராஜ் கலந்துகொண்டு, விபுலானந்தரின் சிலைக்கு மாலை அணிவித்து நிகழ்வை ஆரம்பித்துவைத்ததுடன், அனைவரும் சுவாமி விபுலானந்தரின் சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினர்.
அத்துடன், சுவாமியின் ஜனன தினத்தையொட்டி, “விபுலானந்தம்” சிறப்பு செய்தி மடலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. மேலும், சுவாமி விபுலானந்தரின் உருவப்படம் பொறிக்கப்பட்ட அப்பியாசக் கொப்பிகள், மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி மேயர் எஸ்.சத்தியசீலன், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளரும் விபுலானந்தர் நூற்றாண்டு சபையின் தலைவருமான கே.பாஸ்கரன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதேவேளை, சுவாமி விபுலானந்தரின் 126ஆவது ஜனன தின நிகழ்வுகள், மட்டக்களப்பு, கல்லடி உப்போடையில் உள்ள விபுலானந்தரின் சமாதியிலும், உப்போடை விவேகாந்தா மகளிர் கல்லூரி அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில், இன்று (03) நடைபெற்றன.
30 minute ago
3 hours ago
4 hours ago
Daniel Niroshan Wednesday, 09 May 2018 11:43 AM
திருநீருற்றுக்கேணி பூங்கா என செய்தியில் தவறாக இடம் குறிப்பிடப்பட்டுள்ளது .இது நீருற்றுப் பூங்கா என மாற்றப்பட வேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago
4 hours ago