Princiya Dixci / 2021 மார்ச் 15 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம்
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்கரை வீதி, செட்டிபாளையத்தை வசிப்பிடமாக கொண்ட இரண்டு பிள்ளைகளின் 55 வயதையுடைய தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனது வீட்டிலிருந்து வழமை போல் வீட்டுக்கு அருகாமையில் உள்ள கடற்கரைக்கு நீராடுவதற்காக நேற்று (14) மாலை சென்றிருந்த நபரே, உயிரிழந்த நிலையில் கடற்கரையில் கரையொதுங்கியிருந்ததைக் கண்ட பொதுமக்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
சம்பவ இடத்து்குச் சென்ற களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம், பிரேதத்தை பார்வையிட்டார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தைக் கொண்டு சென்று, பிசிஆர் பரிசோதனையை மேற்கொண்டதன் பின்னர், உடற்கூற்றுப் பரிசோதனைக்குட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
21 minute ago
33 minute ago
38 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
33 minute ago
38 minute ago
46 minute ago