2025 மே 10, சனிக்கிழமை

ஜனன தினம் அனுஸ்டிப்பு

Niroshini   / 2016 ஜனவரி 20 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் பட்டிருப்பு தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் சி.மு.இராசமாணிக்கத்தின்  03ஆவது ஜனன தினத்தையொட்டி சி.மு.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று(20) முற்பகல் களுவாஞ்சிகுடியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது, களுவாஞ்சிகுடி நகரில் உள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், அமரர் சி.மு.இராசமாணிக்கத்தின் மகன் இராபுத்திரன் மற்றும் குடும்ப உறவினர்கள்,ஆதரவாளர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, சி.மு.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் அலுவலகத்தில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது பட்டிருப்பு தொகுதியில் வறுமை கோட்டுக்குட்பட்ட சுமார் இருநூற்று ஐம்பது குடும்பங்களுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டன.ஒரு குடும்பத்துக்கு பத்து குஞ்சுகள் வீதம் வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X