2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதியுடன் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்

Editorial   / 2017 நவம்பர் 03 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியாஸ் ஆதம்

முஸ்லிம் சமூகத்தினுடைய உரிமைகளை பெற்றுக்கொடுக்கின்ற விடயத்தில் ஜனாதிபதி தவறிழைத்துள்ளதாக, முஸ்லிம் சமூகம் அவர் மீது குற்றம் சுமத்தி வருகிறது என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.

ஏறாவூர் ஸாஹிர் மௌலானா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

சிறுபான்மை சமூகத்தின் பூரண ஆதரவினை பெற்றுக்கொண்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன, முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கும், அந்த சமூகத்திற்கான அபிவிருத்திகளையோ அல்லது உதவிகளையோ செய்வதற்கும் சிறிதளவேனும் அக்கரை காட்டவில்லை என முஸ்லிம் சமூகம் அவர் மீது குற்றம் சுமத்தி வருகின்றது.

குறிப்பாக நான் செல்கின்ற பிரதேசங்களில் எல்லாம் முஸ்லிம் மக்கள் இந்த விடயத்தினை கூறுகின்ற போது அதனை நானும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகின்றது. நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கில் கடந்த ஜனாதிபதிக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்களுடைய வாக்குகளைப் பெற்றுக்கொடுப்பதில் நான் பெரும் பங்களிப்பைச் செய்தேன்.

அந்த வகையில் தற்போது ஸ்ரீ.சு.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். எனவே ஜனாதிபதியுடன் பேசி முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கின்றேன் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X