எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 மார்ச் 29 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி நகர சபைக்குது் தெரிவான நல்லாட்சிக்கான தேசிய முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவர், காத்தான்குடி, ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆப்பள்ளிவாசலில் ஜும்ஆத்தொழுகையின் பின்னர் பள்ளிவாசலில் வைத்து, நாளை (30) சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பாக அதன் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்ஹ் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி, இல்மி அஹமட்லெவ்வை ஆகிய இருவரும் இதன்போது உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர்.
இந்தக் கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்கள் இருவரின் சத்தியப்பிரமாணம், வேறொரு தினத்தில் பிரத்தியேகமாக இடம்பெறுமென, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவித்துள்ளது.
காத்தான்குடி நகர சபை தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு 4 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றன. அதில் இரண்டு ஆண் உறுப்பினர்களும் இரண்டு பெண் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
5 minute ago
23 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
23 minute ago
41 minute ago
1 hours ago