Niroshini / 2016 மே 07 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் போலியான முறையில் இசைக்கச்சேரிக்கு டிக்கட் விற்பனை செய்த இருவரை நேற்று (06) காத்தான்குடி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மட்டக்களப்பு நகரில் இசைக் கச்சேரி நடைபெறவுள்ளதாக கூறி மட்டக்களப்பு கல்லடிப்பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் டிக்கட் விற்பனை செய்துள்ளனர்.
இது தொடர்பில் விசாரணை செய்த காத்தான்குடி பொலிஸார் இசைக் கச்சேரி என பொய் கூறி இவர்கள் டிக்கட் விற்பனை செய்துள்ளதாகவும் அதன் மூலம் மூன்று இலட்சம் ரூபாய் பணம் சேகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
44 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago