2025 மே 10, சனிக்கிழமை

டெங்கினால் 6 பேர் உயிரிழப்பு; 2490 பேர் பாதிப்பு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 17 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.சேயோன்

2014ஆம் 2015ஆம் ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் காரணமாக 06 பேர் உயிரிழந்ததுடன், 2,490 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டதாகவும் மாவட்ட  தொற்றுநோயியல் வைத்திய நிபுணர், வைத்தியர் தர்சினி  முருகுப்பிள்ளை தெரிவித்தார்.

கடந்த வருடம் இம்மாவட்டத்தில் டெங்கு நோய் காரணமாக 04 பேர் உயிரிழந்ததுடன், 1,455 பேர்  பாதிக்கப்பட்டனர்.

மாவட்டத்திலுள்ள 20 சுகாதார  வைத்திய அதிகாரி பிரிவுகளில் மட்டக்களப்பு சுகாதார  வைத்திய அதிகாரி  பிரிவில் 352 டெங்கு  நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இப்பிரிவிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.  

இதற்கு அடுத்ததாக கோறளைப்பற்று மத்தி சுகாதார   வைத்திய அதிகாரி பிரிவில் 240 டெங்கு நோயாளர்களும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 182  பேர் டெங்கு நோயாளர்களும் அடையாளம்  காணப்பட்டனர்.

இவ்வாறிருக்க, 2014ஆம் ஆண்டு இம்மாவட்டத்தில் டெங்கு நோய் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்ததுடன், 1035 பாதிக்கப்பட்டனர். 2014ஆம் ஆண்டில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏறாவூர் ஆகிய  சுகாதார  வைத்திய  அதிகாரி பிரிவுகளில் அடையாளம் காணப்பட்டனர். இப்பிரிவுகளில் 588 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

2014ஆம் ஆண்டை விட, கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு  நோயினால்  உயிரிழந்தோர் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X