2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

டெங்குவால் காத்தான்குடியிலுள்ள தனியார் கல்வி நிலையங்களுக்குப் பூட்டு

Suganthini Ratnam   / 2017 மார்ச் 30 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

காத்தான்குடிப் பிரதேசத்தில் டெங்குக் காய்ச்சல் மிகத் தீவிரமாகப் பரவி வருவதால், அப்பிரதேசத்திலுள்ள தனியார் கல்வி நிலையங்கள், முன்பள்ளிகள்;, குர்ஆன் பாடசாலைகள் ஆகியவற்றை ஒரு வாரத்துக்கு மூடுமாறு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பணித்துள்ளது.

இந்நிலையில், அப்பிரதேசத்திலுள்ள சுமார் 15 கல்வி நிலையங்கள், 40 முன்பள்ளிகள், 35 குர்ஆன் பாடசாலைகள் ஆகியவை  இன்று (30) முதல்  மூடப்பட்டுள்ளன. இவை எதிர்வரும் 5ஆம் திகதி மீண்டும் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி, டொக்டர் யு.எல்.நஸிர்தீன் தெரிவித்தார்.

 காத்தான்குடியில் டெங்குக் காய்ச்சல் காரணமாக கடந்த வாரம் 9 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இங்கு  இதுவரையில் 190 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 6 சிறுவர்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .