2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

டெலிகொம் வீதிக்கு புனரமைப்பு

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மிக நீண்டகாலமாக சேதமடைந்து காணப்படுகின்ற  காத்தான்குடி டெலிகொம் வீதியை புனரமைக்கும் வேலை இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட இந்த வீதி சுமார் மூன்று இலட்சம் ரூபாய் செலவில்  புனரமைக்கப்படவுள்ளது.

சேதமடைந்து காணப்படுகின்ற இந்த வீதியைப் புனரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு  அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இருப்பினும், இதற்கான புனரமைப்பு வேலை முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையில், இவ்வீதியை அண்டி வசிக்கும் பொதுமக்கள் தாங்களாக முன்வந்து இவ்வீதியை புனரமைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். காத்தான்குடி நகர சபையின் உபகரணங்களைப் பெற்றுக்கொண்டு இவ்வீதியில்  பள்ளமாகவுள்ள இடங்களில் கற்களை நிரப்பி புனரமைப்பு வேலையை முன்னெடுத்துள்ளதாக  ஓய்வுபெற்ற கிராம உத்தியோகஸ்தரும் சமூக சேவையாளருமான வை.எல்.எம்.இப்றாகீம் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X