R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ. சக்தி
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டிக்கோயா, லோவர் டிவிசனைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு சனிக்கிழமை (27) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேற்படி இளைஞன் விடுதி ஒன்றில் வாடகைக்கு அறை எடுத்து அங்கு தங்கியிருந்து
மட்டக்களப்பிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் தொழில் புரிந்து வந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வருகிறது.
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிவான பீற்றர் போலின் உத்தரவிற்கமைவாக, சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்டார்.
பிரேத பிரிசோதனையின் பின்னர் சடலத்தினை நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும் படி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .