2025 மே 09, வெள்ளிக்கிழமை

டெங்கற்ற பாடசாலையை இனங்காண அதிகாரிகள் விஜயம்

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

சுகாதார அமைச்சால் பாடசாலைகளில்  மேற்கொள்ளப்பட்டு வருகின்ற டெங்கற்ற பாடசாலைகளை உருவாக்கும் நிகழ்ச்சித் திட்டம், தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதில் பாடசாலைகளைச் சுத்தமாக வைத்து டெங்கற்ற சூழலை உருவாக்கும் பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டு, பணப்பரிசு வழங்கப்படவுள்ளது.

அந்தவகையில், கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பல பாடசாலைகளுக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், கிராம உத்தியோகத்தர், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர்கள், இன்று (10) விஜயத்தை மேற்கொண்டு, பாடசாலை சுற்றுச் சூழலை அவதானித்ததுடன் சூழலின் தன்மைக்கேற்ப புள்ளிகளும் இட்டுச் சென்றனர்.

அத்தோடு, பாடசாலைகளில் நிலவும் சுகாதாரச் சீர்கேடுகள் தொடர்பான ஆலோசனைகளையும் வருகை தந்த உத்தியோகத்தர்கள் வழங்கிச் சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X