2025 மே 02, வெள்ளிக்கிழமை

டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்

Freelancer   / 2023 ஜூன் 19 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம் எஸ் எம் நூர்தீன் 

காத்தான்குடியில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் களத்தில் டெங்கு  ஒழிப்பு வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

காத்தான்குடி டெங்கு தடுப்பு செயலியின் தீர்மானத்துக்கமையவும் ஆலோசனையிலும் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

காத்தான்குடி பிரதேச செயலாளரும் காத்தான்குடி டெங்கு ஒழிப்பு செயலணியின் தலைவருமான உதய சிறீதர் மற்றும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நசிர்தீன் ஆகியோரது வழிகாட்டலில் இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த திட்டத்தின் கீழ் புதிய காத்தான்குடி தெற்கு 167 சி கிராம உத்தியோகத்தர் பிரிவில் இன்று(19) திங்கட்கிழமை வீடு வீடான டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் கிராமத்திலுள்ள பொது மக்களுக்கு டெங்கு ஒழிப்பு தொடர்பாக விழிப்பூட்டும் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X