2025 மே 19, திங்கட்கிழமை

டெங்குவால் சிறுமி பலி

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 டிசெம்பர் 27 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலினால் சிறுமியொருவர் நேற்று (26) நள்ளிரவு உயிரிழந்துள்ளதாக, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

 

இந்தச் சம்பவத்தில் புதிய காத்தான்குடி 2ஆம் குறிச்சியைச் சேர்ந்த, எம்.ஐ.பாஸத் ஐனீ (வயது 7) எனும் சிறுமியே டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார்.

 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இச்சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமி காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்னர் சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி காத்தான்குடி ஸாவிய்யா மகளிர் வித்தியாலயத்தில் தரம் இரண்டுக்கு சித்தியடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது என,   காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X