Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா,வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழூர் கிராமத்தில் புதன்கிழமை (19) இரவு இடம்பெற்ற தாக்குதல்ச் சம்பவத்தில் படுகாயமடைந்துள்ள 02 பேர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து, இவர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் 02 சந்தேக நபர்கள்; கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
மகிழுர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னம்பலம் யசோதரன் (வயது 26), அவருடைய சகோதரரான பொன்னம்பலம் உதயசங்கர்; (வயது 31) ஆகியோரே இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர்.
இவர்களின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த மேற்படி சந்தேக நபர்கள், தாங்கள் இரகசிய விசாரணைப் பிரிவிலிருந்து வந்துள்ளதாகவும் வெளியில் வருமாறும் அழைத்துள்ளனர்.
வெளியில் செல்வதற்கு யசோதரன் மறுத்தபோது, வீட்டுக்குள் நுழைந்த சந்தேக நபர்கள், மேற்படி அவரை ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதனைத்; தடுப்பதற்குச் சென்ற அவரது அண்ணவான உதயசங்கரும் ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற வேளையில் அவ்வீட்டிலிருந்த ஏனையோர் கத்தியபோது, சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளனர். இவ்வாறு தப்பிச் சென்றுகொண்டிருந்தவர்களை இளைஞர்கள் சிலர் பின்தொடர்ந்ததாகவும் இதன்போது, சந்தேக நபர்களின் மோட்டார் சைக்கிள் ஒந்தாச்சிமடத்தில் விபத்துக்கு உள்ளானது. இது தொடர்பில் பொலிஸாருக்கு பின்தொடர்ந்த இளைஞர்கள் தகவல் வழங்கிய நிலையில், சந்தேக நபர்கள்; கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்தச் சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago