Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
காத்தான்குடி பொது நூலகத்தின் ஏற்பாட்டில் 'வாசிப்பின் ஊடாக நவீன சமூகத்தை உருவாக்குவோம்' எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு நாளை சனிக்கிழமை தொடக்கம் 31ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக காத்தான்குடி நகர சபையின் செயலாளரும் விசேட ஆணையாளருமான எஸ்.எம்.எம்.ஸபி தெரிவித்தார்.
ஒக்டோபர் மாதம் அனுஷ்டிக்கப்படும் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு காத்தான்குடி நகர சபையில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
ஒக்டோபர் 1ஆம் திகதி தேசிய வாசிப்பு மாத ஆரம்ப வைபவமும் முன்பள்ளி மாணவர்களுக்கான சித்திரப் போட்டியும்; 3ஆம் திகதி பொது நூலக வாசகர் வட்டமும் நூலக ஊழியர்கள் இணைந்து நடாத்தும் நூலக சிரமதானமும் 6ஆம் திகதி பாடசாலையில் தரம் -3 மாணவர்களுக்கான வாசிப்புப் போட்டியும்; 13ஆம் திகதி காலை நூலக தகவல்களை ஒழுங்குபடுத்துதல் செயலமர்வும் மாலை உள்ளூர் எழுத்தாளர், நூல் வெளியீட்டாளர், கவிஞர், கலைஞர்களுக்கான செயலமர்வும் 17ஆம் திகதி விழிப்புணர்வு ஊர்வலமும் 18ஆம் திகதி பாடசாலையில் தரம் -10 மாணவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கும் இடம்பெறவுள்ளன.
அத்தோடு தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளில் இறுதிநாள் நிகழ்வு 31ம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் இதில் நூலகத்துக்கான இணைய வசதி ஆரம்பம், புத்தகக் கண்காட்சி, பாடசாலை மாணவர்களின் விவாத அரங்கு, எழுத்தாளர்கள் கௌரவிப்பு, நூலக வாசகர், அங்கத்தவர் கௌரவிப்பு, சஞ்சிகை வெளியீடு, போட்டியாளர்களுக்கான பரிசளிப்பு, 2015ஆம்; ஆண்டு தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளை சிறப்பாக நடாத்தி முடித்தமைக்கான தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் காத்தான்குடி பொது நூலகத்துக்கு வழங்கப்பட்ட விருதினை நூலகத்துக்கு கையளித்தல் போன்ற நிகழ்வுகள் மிகச் சிறப்பாக இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025