Suganthini Ratnam / 2016 மே 09 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கட்டார் நாட்டுக்கு வேலைவாய்ப்புக்குச் சென்ற தனது மகன் பேரானந்தம் செந்தூரன் (வயது 22) கடந்த ஆறு மாதங்களாக தொடர்பற்ற நிலையில் உள்ளதாக கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திலும்; மனித உரிமைகள் ஆணைக் குழுவின் மட்டக்களப்பு அலுவலகத்திலும் அவரது தாய் முறைப்பாடு செய்துள்ளார்.
மட்டக்களப்பு புதுநகர், எல்லை வீதி, முதலாம் குறுக்கைச் சேர்ந்தவரே தொடர்பின்றி உள்ளார்.
தனது மகன் அவரது நண்பர்கள் மூலம் கிடைத்த விசாவைப் பயன்படுத்தி 2014.01.01 அன்று காய்ச்சி ஒட்டுநர் வேலை பெற்று கட்டாருக்குச் சென்றார். அன்றிலிருந்து 30.10.2015 அன்றுவரை எங்களுடன் அவர் தொடர்பிலிருந்தார். அவ்வப்போது பணமும் அனுப்பினார். கடைசியாக தனது வங்கிக் கணக்குக்கு கடந்த 18.07.2015 அன்று 17,800 ரூபாய் அனுப்பியிருந்தார என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது.
எனவே, தொடர்பின்றியுள்ள தனது மகனை மீட்டுத் தருமாறு அத்தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த முறைப்பாடு குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவனத்துக்கு எடுத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலக அதிகாரி அப்துல் அஸீஸ், இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
43 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago