2025 மே 08, வியாழக்கிழமை

த.தே.கூ. வை சிதறடிப்பதற்கான சதித்திட்டம்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதறடிப்பதற்கான பல்வேறு சதித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அச்சதித் திட்டங்களில் கூட்டமைப்பு சிக்கியுள்ளதா என்பது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் கூட்டமைப்பிப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை கட்சி ஆதரவாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலந்தொட்டு   கூட்டமைப்பு எடுக்கும் முடிவுகளை நாங்கள் அனைவரும் ஏற்று ஒருமித்துச் செயற்பட்டு வந்துள்ளோம். ஆனால், நல்லாட்சிக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் எடுத்த முடிவை  கூட்டமைப்பிலுள்ள ஒரு கட்சி ஏற்றுக்கொள்ளாமல் சென்ற சம்பவம் இந்த முறையே இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் ஒன்றுபட்டு ஒரு முடிவை எடுக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளமை  கூட்டமைப்பை சிதறடிப்பதற்கான ஆரம்பப் புள்ளியாக பார்க்க வேண்டியதாகவுள்ளது' என்றார்.

'மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும்  வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் இடையிலுள்ள பிரச்சினையை நாங்களே பேசி தீர்த்துவைக்க வேண்டும். அதற்கான சமிக்;ஞையை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்துள்ளார். காலம் தாழ்த்தாது இதை மேற்கொண்டு கூட்டமைப்பின் ஒற்றுமையை  வெளிபடுத்தவேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X