2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

திருட முற்பட்ட இருவர் மடக்கிப்பிடிப்பு

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்,ஆர.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  புதுக்குடியிருப்புக் கிராமத்திலுள்ள வீடொன்றில் திருடுவதற்காக வந்த திருடர்கள் இருவர் அங்கிருந்து தப்பிச்செல்ல முற்பட்டபோது  ஞாயிற்றுக்கிழமை (23) மாலை  அவர்கள் இருவரும் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தொழில் நிமித்தம் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய குறித்த வீட்டு உரிமையாளரைக் கண்ட திருடர்கள் இருவரும் வீட்டில் திருடப்பட்ட பொருட்களை கைவிட்டிட்டு தப்பிச்செல்ல முற்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த வீட்டு உரிமையாளர் கூச்சலிட்டபோது அங்கு வந்த பொதுமக்கள், மதில் மேலால் பாய்ந்து தப்பிச்செல்ல  முற்பட்ட இத்திருடர்களை மடக்கிப்பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  
தொலைக்காட்சிப்பெட்டி உள்ளிட்ட பொருட்களையும் பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் திருடியிருந்ததுடன், பணத்தைத் தவிர ஏனைய பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.  

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X