2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

திருடப்பட்ட நகைகள் மீட்பு

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, புதிய காத்தான்குடி பரீட் நகர் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் திருடப்பட்ட தங்கநகைகளை அவ்வீட்டு நுழைவாயிலுக்கு அருகில் காணப்பட்ட குப்பைக்குள்ளிருந்து  சனிக்கிழமை (10) இரவு மீட்டுள்ளதாக பொலிஸார்; தெரிவித்தனர்.

அவ்வீட்டுச் சிறுவன் குப்பையுடன் நகைகள் காணப்பட்டதை அவதானித்து, அது தொடர்பில் பெற்றோருக்குத் தெரியப்படுத்தியுள்ளான். இதனை அடுத்து, பெற்றோர் சென்று அந்த நகைகளை எடுத்துப் பார்த்தபோது, அவர்களின் வீட்டில் திருடப்பட்ட நகைகளெனத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸாருக்குத் தகவல் வழங்கிய நிலையில், அங்கு சென்ற பொலிஸார் விசாரணையின் நிமித்த அந்நகைகளை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசென்றுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட நகைகளில் 3 காப்புகள், தங்கச்சங்கிலி உட்பட சுமார் 20 பவுண் நகைகள் காணப்படுவதாகவும்; பொலிஸார் கூறினர்.

நகைகளைத் திருடியவர் அவற்றை வீசி விட்டுச் சென்றிருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி குறித்த வீட்டு உரிமையாளரும் அவரது பிள்ளைகளும்  உறங்கிக்கொண்டிருந்த வேளையில், வீட்டு உரிமையாளரின் மனைவி மலசலகூடம் சென்றபோது, வீட்டினுள் மறைந்திருந்த திருடன் மனைவியை பொல்லால்; தாக்கிவிட்டு திருடப்பட்ட இரண்டரை இலட்சம் ரூபாய்; பணம் மற்றும்  20 பவுண் நகையுடன் தப்பியோடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X