Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட வெட்டுக்காடு ஞானசூரியம் சதுக்கத்தில் சுகாதாரப் பிரவினரின் திரட்டு நிலையம் நேற்று புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
வெட்டுக்காடு பிரதேச மக்களின் நன்மை கருதி மட்டக்களப்பு மாநகர சபையின் 20 இலட்சம் ரூபாய் செலவில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையமானது சுகாதார சேவை நிலையம் மற்றும் வெட்டுக்காடு பொதுச் சுகாதார அலுவலகத்தைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில் மாநகர சபையின் பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன், வெட்டுக்காடு பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.அமுதமாலன், பொதுச்சுகாதார பரிசோதகர் ஜெய்சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025