2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

துறைநீலாவணை மீனவர்களுக்கு இலகு கடன்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 28 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, துறைநீலாவணைக் கிராமத்திலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அம்மீனவர்களுக்கு இலங்கை சிறு மீனவச் சம்மேளனத்தினால் இலகு கடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இக்கிராமத்தில் மொத்தமாக 300 மீனவர்கள் உள்ளனர்.  மீனவர் ஒவ்வொருவருக்கும் 10,000 ரூபாய் படி 100 மீனவர்களுக்கு முதற்கட்டமாக இலகு கடன் வழங்குவதற்கு தீர்;மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக துறைநீலாவணை தெற்கு மீனவர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் கா.கைலாசபதி தெரிவித்தார்.

இதன் பின்னர் ஏனைய மீனவர்களுக்கும் இக்கடன் வழங்கப்படுமெனவும் அவர் கூறினார்.

இந்த இலகு கடன் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல், துறைநீலாவணை பொதுநூலக வளாகத்தில் புதன்கிழமை (27) நடைபெற்றது.

இதன்போது, இலகு கடன் வசதியை பெற்றுக்கொள்ளும் மீனவர்கள் சிறு மீன்களைப் பொதி செய்து சந்ததைப்படுத்தும் முறைமை தொடர்பிலும்  விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், இங்கு நன்னீர் மீன்பிடியை வளமாக்குதல்,  கண்டல் தாவரங்களை வளர்ப்பதன் அவசியம், சிறு மீன்பிடியில் ஈடுபடுகின்ற பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், மீன்களைச் சந்தைப்படுத்துதல் ஆகியன தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X